Mandiramavadu niru | மந்திரமாவது நீறு

TAMIL LYRICS

மந்திரமாவது   நீறு 

வானவர் மேலது  நீறு 

சுந்தரமாவது  நீறு 

துதிக்கப்படுவது  நீறு 

தந்திரமாவது  நீறு 

சமயத்திலுள்ளது   நீறு 

செந்துவர் வாயுமை பங்கன் 

திரு ஆலவாயான் திரு நீறே...


ஆற்றல் அடல்விடை யேறும்
ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
பூசுரன்ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
தீப்பிணி யாயினதீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே...

ENGLISH LYRICS

Mandiramavadu niru

Vaanavar meladu niru

Sundaramavadu niru

Thudikkapaduvadu niru

Thandiramavadu niru

Samayathil ulladu niru

Senduvar vayumai pangan 

Thiru Aalavayan thiru niire…


Aatral adal vidai erum 

Aalavaayaan thiru neetrai 

Potri pugalinilaavum

Bhoosura gnanasambandan

Thetri thenal udal utra 

theepini yaayina theera

Saatriya paadalgal patthum

Vallavar nallavar thaame...