

சகல செல்வங்களும் தரும் | Sakala Sevangalum Tharum
TAMIL LYRICS
சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை!
மா தேவி! நின்னைச் சத்யமாய், நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம்,
அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி,
துணிவு, வாழ் நாள், வெற்றி, ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி, நீ சுகானந்த
வாழ்வு அளிப்பாய்; அமிர்த குண சாலி! பரி பாலி! அநு கூலி!
திரி சூலி! மங்கள விசாலி!
மகவு நான், நீ தாய், அளிக்கொணாதோ? மகிமை வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவகாமி மகிழ் வாமி! அபிராமி உமையே!
ENGLISH LYRICS
Sakala selvangalum tharum imaya giri raja thanayai,
Maadevi , ninnai,Sathyamai nithyam ullathil
Thudhikkum uthamarukku irangi migavum,
Akilam athil noy inmai, kalvi, dhanam dhaniyam,
Azhagu , pugazh, perumai, ilamai, Arivu, santhanam , vali, thunivu
Vazhnaal vetri aagumnaloozh nugarchi,
Thogai tharum pathinaru perum nee thanthu aruli nii sukhananda
Vazhvu alippay, Amritha guna Sali , paripali , anukoli ,
Thiri soli, Mangala visali,
Magavu naan , Nee thay , alikonaatho ? magimai Valar
Thiru kadavooril vaazh vaami , shubha nemi, pugazh nami,
Siva sami magizh vami, Abhirami , umaye.
Video for Sakala selvangalum Tharum
0 Comments