வேலுண்டு வினையில்லை | Velundu Vinai illai
TAMIL LYRICS
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே...
(வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்... (2)
வேலவனே என்று தினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே... (2)
(வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... (2)
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய்... (2)
(வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்... (2)
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ...(2)
(வேலுண்டு)
ENGLISH LYRICS
Video for Velundu Vinayillai
0 Comments